மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவபிரசாத் IPS சைபர்கிரைம் மோசடி சம்பந்தமாக 1930 என்ற இலவச அழைப்பை பொதுமக்கள் தொடர்பு கொள்ள அறிவுரை வழங்கினார்...

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவபிரசாத் IPS சைபர்கிரைம் மோசடி சம்பந்தமாக 1930 என்ற இலவச அழைப்பை பொதுமக்கள் தொடர்பு கொள்ள அறிவுரை வழங்கினார்...

மதுரை மாவட்டத்தில் சைபர்கிரைம் காவல் நிலையமானது 01.03.2021ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மு.மணி, காவல் ஆய்வாளர் திருமதி. R.பொன்மீனா மற்றும் இரண்டு சார்பு ஆய்வாளர்கள், எட்டு காவல் ஆளினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் புகார்களில் கடந்த ஒரு மாதத்தில் சைபர்கிரைம் காவல் நிலையம் மூலம் ரூபாய் 4,67,000/- மதிப்புள்ள 51 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவபிரசாத் IPS அவர்களால் இன்று 16.07.2022 ந் தேதி உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 1,08,63,850/- மதிப்புள்ள 777 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் 1,60,730/ மற்றும் இதுவரை ரூபாய் 28,25,730/- உரியவர்களுக்கு அவர்களுடைய வங்கிக்கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கிகணக்கு எண், CVV மற்றும் OTP போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், மேலும் பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் Investment App களை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மற்றும் குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் loan App-களிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் Video Call ஜ attend செய்ய வேண்டாம், வங்கி கணக்கு விபரங்களை Update செய்யுமாறு வரும் link -களை Click செய்ய வேண்டாம். Remote access App களான Anydesk, teamviewer போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், யாரேனும் மேற்கூறிய வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cvhercrime.gov.in முகவரியிலும் 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம். என மதுரை கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Jpr,Chennai.