கோவை மாவட்ட காவலர் குடும்பங்களுக்கு ஆயுதப்படை மைதானத்தில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவலர்களின் குடும்பங்களது நலனை கருத்தில் கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் (09.07.2022)அன்று நடத்தப்பட்டது. அப்போட்டிகளில்வெற்றிபெற்றவர்களுக்கு(10.07.2022)அன்றுபரிசுகள் வழங்கும் விழா மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டதுடன், வெற்றி பெற்ற காவலர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசுகளை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இந்நிகழ்ச்சி ஏற்பாடு, காவல்துறையினரின் குடும்பத்தினர்களிடையே மகிழ்ச்சியை அளித்ததுடன், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
போதிவர்தன்,கோவை.


Comments (0)
Facebook Comments (0)