ஊரடங்கில் உயிருக்கு போராடிய குழந்தை காப்பாற்றிய திருவாரூர் மாவட்ட காவல்துறையினர்...

ஊரடங்கில் உயிருக்கு போராடிய குழந்தை காப்பாற்றிய திருவாரூர் மாவட்ட காவல்துறையினர்...

தங்களது  குழந்தை உடல் நிலை சரியில்லாமல் வலிப்பு ஏற்பட்டு, சாலையில் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து பரிதவித்து நின்ற நிலையில், காவல் துறையினர்  மிக துரிதமாக செயல்பட்டு  குழந்தையை காவல் வாகனத்தில் கொண்டு சென்று  அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்கு அனுமதித்த சம்பவம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த முத்துகுமாரசாமி, மெல்மா தம்பதியரின் 1 I/2 வயது குழந்தை உடல் நல குறைவால் வலிப்பு ஏற்பட்டு துடித்த நிலையில், பெற்றவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இதை கண்ட ரோந்து காவல் துறையினர். காவல் வாகனத்தில் குழந்தையை ஏற்றி சென்று நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உரிய நேரத்தில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவர்களின் சிகிட்சையால் குழந்தையும் பூரண குணமடைந்துள்ளது.

காவல் பணியிலும்  மனித நேயத்துடன் மிக துரிதமாக செயல்பட்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பாராட்டினார்.பொதுமக்கள் தரப்பிலும் சமூக வலைதளங்களிலும் திருவாரூர் மாவட்ட காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அந்தோணி சேவியர், தலைமை நிருபர்---