காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 350க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் மனுக்கள் மீது விசாரணை ...

காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்தில்  ஒரே நாளில் 350க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் மனுக்கள் மீது விசாரணை ...

 திருவள்ளூர் மாவட்டம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவிற்கு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டிருந்த 117 மனுக்கள் விசாரணையை துரிதமாக மேற்கொண்டு அதனை குறைக்கும் பொருட்டு, காஞ்சிபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி, இ.கா.ப.  பரிந்துரையின்பேரில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.அரவிந்தன், இ.கா.ப.  உத்திரவின்பேரில், 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  மேற்பார்வையில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் 117-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்து, இன்று 29.12.2020-ஆம் தேதி முற்பகல் சிறுவானூர் கண்டிகையில் உள்ள சாய் திருமண மண்டபத்திற்கு 350-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் வரவழைக்கப்பட்டு, மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொண்டனர்.