துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை சார்பில் வேலை வாய்ப்பு ஆலோசனை முகாம்...

பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் IPS., அவர்களின் வழிகாட்டுதலின்படி பெரியகுளம் உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில்,

 பெரியகுளம் காவல் நிலையம் மற்றும் தென்கரை காவல் நிலையம் ஆய்வாளர்கள் மீனாட்சி , ஜெயச்சந்திரன், சுகுமாறன் ஆகியோர்களது சிறப்பு ஏற்பாட்டின்படியும் - மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோர் இணைந்து படித்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் பெண்களை நல்வழிப்படுத்தும் வகையிலும், வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் வரும் 19.12.21 ம் தேதி கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறக்கூடிய தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி,  பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கோவிந்தன் -மயில்தாய் அம்மாள் நினைவு திருமண மண்டபத்தில் பெரியகுளம் உட்கோட்டகாவல்துறை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் வேலை வேண்டுவோர் எடுத்துச் செல்ல வேண்டிய சான்றிதழ்கள் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டன. முகாமில் தங்களது ஆவணங்களை கொண்டு சென்று பதிவு செய்திட வேண்டுமாய் கேட்டுக் கொண்டனர்.  

பெரியகுளம் மற்றும் தென்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழவடகரை, வடகரை, இ.புதுக்கோட்டை , நேரு நகர் ,எண்டபுளி, வேல் நகர் , பட்டாளம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், வடுகபட்டி, மேல்மங்கலம், தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, சருத்துப்பட்டி, ஜல்லிபட்டி, சத்யாநகர் லெட்சுமிபுரம், உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் கிராமப்புற வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்கள், மற்றும் பெண்கள்  ஏராளமானோர் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் பேசுகையில் படித்த இளைஞர்கள் தவறான வழியில் செல்லக் கூடாது என்றும், நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்றும், வாழ்வில் வெற்றி பெற லட்சியம் மற்றும் தன்னம்பிக்கை மிக அவசியம் என்றும், கடின உழைப்பே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் போட்டி நிறைந்த இந்த உலகில் அரசு வேலையை அதிகம் எதிர்பாராமல் தனியார் துறைகளிலும் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, சாதிய உணர்வை தூங்கி எரிந்து விட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இம்முகாமில் கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெறுவதற்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் கம்பத்தில் 19ம் தேதி வேலைவாய்ப்பு முகாமில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

செல்வம், மாவட்ட நிருபர்.