குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் விழிப்பு உணர்வு பிரச்சாரம் ...
தேனி மாவட்டம் கோட்டைப்பட்டி கிராமத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து சைல்டு லைன் மற்றும் காவல் துறையினர் இணைந்து விழிப்பு உணர்வு பிரச்சாரம் நடத்தினர். பெண் சிசுக் கொலை, கை விடப்பட்டக் குழந்தைகள் , போதைப் பழக்கத்திற்குள்ளான குழந்தைகள், குழந்தை திருமணம், தெருவோரக் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் , குடும்ப வன்முறைகளால் பாதிக்கபடும் குழந்தைகள், பாலியல் தொல்லைக்கு உட்படுத்தபடும் குழந்தைகள் , குழந்தைகளை துன்புறுத்தல் , குழந்தைக் கடத்தல் உள்ளிட்டவைகள் குறித்து நாடகம், பாடல்கள் மூலம் கோட்டைப்பட்டி கிராமத்தில் விழிப்பு உணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

பிரச்சாரத்தில் தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்கணிப்பாளர் சங்கரன், தேனி டிஎஸ்பி முத்துராஜ், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர் திலகம், ஏ.எச்.எம் டிரஸ்ட் மற்றும் தேனி சைல்டு லைன் இயக்குனர் முகமது சேக் இப்ராகிம், தேனி சைல்டு லைன் மாவட்ட ஒருங்கினைப்பாளர் மஞ்சு உள்பட கோட்டைப் பட்டி கிராம பொது மக்கள் மற்றும் காவல் துறையினர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் குழந்தை திருமணத்தை எவ்வாறு தடுக்க வேண்டும் என்று பொது மக்களிடம் கேள்விகள் எழுப்பிய கூடுதல் காவல் கண்காணிபாளர் பதில் கூறிய பொது மக்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டைத் தெரிவித்தார்கள்...



Comments (0)
Facebook Comments (0)