வாணியம்பாடியில் காவலர் இருவர்கள் போதை பொருட்கள் கடத்தி வந்த இளைஞரை ஒரு கிலோ மீட்டர் துரத்தி சென்று பிடித்தனர்...
வாணியம்பாடியில் இனிப்பு பண்டகளுக்கு நடுவில் குட்கா பொருட்களை வைத்து கடைகளுக்கு சப்ளை செய்த இளைஞரை போலீஸார் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தூரத்தி சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி டிச 16 ,திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் தேன் மிட்டாய், பர்பி உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை இளைஞர் ஒருவர் சப்ளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிபிரிவு காவலர் திங்கலன் மற்றும் தலைமை காவலர் குமரவேல் ஆகியோர் அந்த இளைஞர் மீது சந்தேகமடைந்து அருகில் சென்றபோது அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.
பின்னர் போலீஸார் அந்த இளைஞரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்தி சென்று அந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அந்த இளைஞர் கேத்தாண்டபட்டி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பதும் இருசக்கர வாகனததில் பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் இனிப்பு பண்டகளுக்கு இடையில் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
அவரிடம் சுமார் ரூ 20 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களுடன் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சுதாகரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடிவேல்,மாவட்ட நிருபர்.


Comments (0)
Facebook Comments (0)