மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் தேனி மாவட்ட காவல்துறையின் பிடியில் சிக்கியது ...

மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் தேனி மாவட்ட காவல்துறையின் பிடியில் சிக்கியது ...

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சோதனைச் சாவடி அருகில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த TN60 P 5555 பதிவெண் கொண்ட வாகனத்தை சோதனை செய்ததில் அவற்றில் மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்டதில் பெரியகுளத்தில் இயங்கி வரும் பிரபல பலசரக்கு  கடையான செந்தில்ஸ்டோர்- க்கு விற்பனைக்காக கொண்டு செல்லப் பட்டது தெரிய வந்தது. 

காட் ரோடு சோதனைச்சாவடியில்  சோதனை செய்தபோது வாகனத்தையும், வாகனத்தில் கடத்தி வரப்பட்ட குட்காவையும் போக்குவரத்து ஆய்வாளர் வைரமணி  போக்குவரத்து  சிறப்பு சார்பு ஆய்வாளர்  தர்மர்  சிறப்பு சார்பு ஆய்வாளர்  குமரேசன்   ஆகியவர் பறிமுதல் செய்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்கள். இது போன்று கடந்த ஆண்டு போடி தாலுகா நிலைய ஆய்வாளர் தர்மர் அவர்கள் தலைமையில் டன் கணக்கில் குட்கா மற்றும் பான் மசாலா பிடிபட்டது குறிப்பிடத்தக்க நிகழ்வு தேனி மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கும் குட்கா பதுக்களையும் விற்பனை செய்யும் நபர்களையும் தடுக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அவர்களின் நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைத்து  செயல்பட்டால் மட்டுமே ! இது போன்ற தடை செய்த குட்கா பான் மசாலா கடத்தல்களை தடுக்க முடியும் என்பது தேனி மாவட்ட பொது மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது. தற்போது கொரோனோ பாதிப்பு இருந்து வரும் சூழ்நிலையை கடத்தல்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள் .