திண்டுக்கல் மாவட்டத்தில் வன உயிரின வார விழா காவல்துறை கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்...

திண்டுக்கல் மாவட்டத்தில் வன உயிரின வார விழா காவல்துறை கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்...

வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம்  குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வருடந்தோறும் வன உயிரின வார விழா அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தமிழகமெங்கும் வனத்துறை மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாபெரும் சைக்கிள் பேரணியானது இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தொடங்கப்பட்டு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவுபெற்றது. இப்பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், வனத்துறை பணியாளர்கள், காவல்துறை பணியாளர்கள் மற்றும் G.T.N கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.