தேனியில் கனரக வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய கூம்பு வடிவ ஹாரன்கள் அகற்றம்...

தேனியில் கனரக வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய கூம்பு வடிவ ஹாரன்கள் அகற்றம்...

தேனி மாவட்டத்தில் கனரக வாகனங்களான லாரி, டிப்பர் லாரிகள், தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்துகள் அதிக படியான  சத்தம் எழுப்ப கூடிய கூம்பு வடிவ ஹாரன்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே IPS, மற்றும் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் துறையினருடன் இணைந்து அதிகப்படியான சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒளிப்பானை அகற்றி, அபரதம் விதிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 14.10.2022 தேனி மாவட்ட அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி தலைமையில்நடைபெற்றது.இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட லாரி, டிப்பர் லாரி தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்துகளில் காற்று ஒளிப்பார்கள் அகற்றப்பட்டது.

வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் ரூபாய் மொத்தமாக சுமார் 10,300 பணம் வசூல் செய்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூழ்செய்த பணத்திற்க்கான ரசீது வழங்கப்பட்டது.

 இந்த அதிரடி நடவடிக்கையினை தேனி பொதுமக்கள்,  வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
 செல்வம், தேனி.