ஜெ-5 சாஸ்திரி நகர்  காவல் நிலைய ஆய்வாளர் அதிரடி...

ஜெ-5 சாஸ்திரி நகர்  காவல் நிலைய ஆய்வாளர் அதிரடி...

சாஸ்திரி நகர்  பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது.84 மதுபாட்டில்கள், 24 பீர் பாட்டில்கள் மற்றும் ரூ.400/- பறிமுதல்.
 
  

 சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, ஜெ-5 சாஸ்திரி நகர்  காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (12.8.2018) அப்பகு யில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சாஸ்திரி நகர், 1வது அவென்யூவில்    கண்காணித்தபோது, அங்கு ஒருவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. 
அதன்பேரில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த  மாரிமுத்து, வ/வ/45,  த/பெ.ஆறுமுகம், எண்.2/57,  சீமான் கோட்டை கிராமம், அரசன் ஏரி அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம்  என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து                180 மி.லி. அளவு கொண்ட 84 மதுபாட்டில்கள் மற்றும் 24 பீர்பாட்டில்கள் மற்றும் ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.