மதுரை வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.....
அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பார்த்தசாரதி, சார்பு ஆய்வாளர் திரு. ரவிக்கண்ணன் ஆகியோர்கள் வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் 20 பேர், பெற்றோர்கள் 50 பேர், மாணவர்கள் 50, மாணவியர்கள் 25 பேர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கண்டிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் ரூ.1,500/- அபராதம் செலுத்த வேண்டும் என்றும், இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் கண்டிப்பாக செல்லக்கூடாது மீறினால் ரூ.1,100 அபராதம் செலுத்த வேண்டும் என்றும், கண்டிப்பாக தலைக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் மேலும் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றவேண்டும் என்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் இரு சக்கர வாகனத்தை மாணவ மாணவிகளுக்கு ஒருபோதும் கொடுக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது . மேலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சாலை போக்குவரத்து பாதுகாப்புக் குழு அமைப்பது சம்பந்தமாக பட்டியல் தயார் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.


Comments (0)
Facebook Comments (0)