அரியலூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச சேவை ...

அரியலூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச சேவை ...

தமிழ்நாட்டிலே முதன் முறையாக  Women Help Desk வழிகாட்டுதல் வகுப்பு அரியலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது..

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 22.06.2021 இன்று Women Help Desk -க்கு  நியமிக்கப்பட்ட பெண் காவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றது.

இந்த வழிகாட்டுதல் வகுப்பிற்கு வந்த அனைவரையும் வரவேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா வரவேற்புரை ஆற்றினார்கள்.

தமிழ்நாடு கூடுதல் காவல் துறை இயக்குனர் சீமா அகர்வால் I.P.S .,  காணொளி வாயிலாக  சிறப்பு விருந்தினராக   கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
முன்னதாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் I.P.S .,  தொடக்க விழா உரையும், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் .A.ராதிகா I.P.S.,  அவர்கள் முன்னுரையும் ஆற்றினார்கள். இறுதியாக அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேகர்  நன்றியுரை ஆற்றினார்கள்.

இந்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க காவல் நிலையங்களிலும் Women Help Desk அமைக்கப்பட்டு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரண்டு பெண் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன,அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் 6 காவல் நிலையங்களில் Women Help Desk அமைக்கப்பட்டுள்ளது. இந்த Women Help Desk சேவை 24 மணி நேரமும் செயல்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச சேவை தொடர்பு எண் - 181 வரும் அழைப்புகளுக்கு காவல்துறையினர் அவர்கள் இருப்பிடம் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். பெண்கள் சார்பான பிரச்சினைகள் தொடர்பாக CSR (Community Service Register)  அல்லது வழக்கு பதிவு செய்யவும், பிரச்சனைகள் தொடர்புடைய மற்ற துறைகளான சமூகநலத்துறை, மருத்துவ மற்றும் உளவியல் துறை, தொழிலாளர் நலத்துறை, மகளிர் திட்டம் போன்ற துறைகளுடன் இணைந்து அவர்களது பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினை அளிப்பார்கள்.
 மேலும் ஆதரவற்றோருக்கு அடைக்கலம் அளிக்கவும், பொருளாதார வசதி செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து தரப்படும். பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கூறவும், பாதுகாப்பு அளிக்கவும் அரியலூர் பொது மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர் கண்காணிப்பில் One Step centre அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில்
One step centre coordinator  மீனாட்சி, மாவட்ட தொழிலாளர் அதிகாரி குருநாதன், மனநல மருத்துவர் அன்பழகி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி, ஆகியோர் சிறப்பு வகுப்பு எடுத்தார்கள்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி (PEW) சேகர்(CWC), ராதாகிருஷ்ணன் (Cyber crime) அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

விஜய குமார் , மாவட்ட நிருபர்...