கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., பொதுமக்களுக்கு அறிவுரை...
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி இ.கா.ப., தலைமையில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., முன்னிலையில் ரோட்டரி கிளப் உடன் இணைந்து போதைப்பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும், நாம் செய்யும் தவறினால் குடும்பத்தினர்களுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கோவை மாவட்டத்தில் போதைப் பொருளை ஒழிக்க காவல்துறையினர் எடுத்துவரும் தீவிர நடவடிக்கைகளை பற்றியும், பொதுமக்கள் போதை பொருள் விற்பனை சம்மந்தமான தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறையினருக்கு எவ்வித தயக்கமுமின்றி தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் , போதைப் பொருளால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து உள்ளது. எனவே மக்கள் போதைப்பொருள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
போதிவர்தன், உதவிஆசிரியர்.


Comments (0)
Facebook Comments (0)