சென்னை காவல்ஆணையரக 3ம் எண்நுழைவுவாயில் அருகே காவல்உதவிமையம் அறை சங்கர்ஜிவால், இ.கா.ப.,திறந்துவைத்தார்.

சென்னை காவல்ஆணையரக 3ம் எண்நுழைவுவாயில் அருகே காவல்உதவிமையம் அறை சங்கர்ஜிவால், இ.கா.ப.,திறந்துவைத்தார்.

சென்னைபெருநகரகாவல்ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவின்பேரில்,காவல்ஆணையரகத்தில்பொதுமக்கள்மற்றும்காவல் ஆளிநர்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுவருகின்றன. இதன்தொடர்ச்சியாக,காவல்ஆணையரகத்தின் நான்கு நுழைவு வாயில்களிலும் ஆயுதம் ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் காப்புபணிமேற்கொள்வதுடன், 3வது நுழைவுவாயில் புகார்கொடுப்பதற்கு மற்றும் இதரபணிகளுக்காக வரும் பொதுமக்களை விசாரித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து துரிதநடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

காவல்ஆணையரகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், அவர்களிடம் மனிதநேயத்துடன் குறைகளை கேட்டறிந்து உதவிபுரிய காவல்உதவிமையமும், பொதுமக்கள் மழைமற்றும் வெயில் காலங்களில் சிரமமின்றி வந்து செல்லவும், பணியிலிருக்கும் பாதுகாப்பு சென்னைகாவல் மற்றும் ஆயுதப்படை காவல்ஆளிநர்களின் நலனை கருத்தில் கொண்டும், சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், நுழைவுவாயில் எண்.3 அருகேகாப்புபணி (Guard Duty) மேற்கொள்ளும் ஆயுதப்படைகாவலர்கள் மற்றும் இதரபணிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு சென்னைகாவல் பிரிவினருக்கான கண்காணிப்புமற்றும் பார்வையாளர்கள் சோதனை அறை (Security Chennai Police- Surveillance Room) மற்றும் இருசக்கரவாகனநிறுத்துமிடம் (2 Wheeler Vehicle Parking) ஆகியகட்டுமானங்கள் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றது.அதன் பேரில், காவல்ஆணையரக நுழைவுவாயில் எண்.3 அருகே புதிதாககட்டப்பட்ட காவல்உதவிமையம், (Police Assistance Booth) கண்காணிப்பு மற்றும் பார்வையாளர்கள் சோதனைஅறை, (Security Chennai Police Surveillance Room) இருசக்கரவாகன நிறுத்துமிடம் (2Wheeler Vehicle Parking) ஆகியவற்றை சென்னைபெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (06.04.2022)மாலைதிறந்துவைத்தார். இதன் மூலம் சென்னை காவல்ஆணையரகத்திற்கு வரும் பொதுமக்கள் சிரமமின்றிவந்து செல்லவும், பணிபுரியும் காவல்ஆளிநர்கள் பொதுமக்களிடம் மனிதநேயத்துடன் அணுகிகுறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உதவிபுரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல்கூடுதல்ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர்ஜெ.லோகநாதன்,இ.கா.ப.,இணை ஆணையாளர் தலைமையிடம் பி.சாமூண்டீஸ்வரி, இ.கா.ப., மற்றும்அதிகாரிகள்கலந்துகொண்டனர்.

Jpr, Reporter