மதிப்புமிகு மாணவன் விருது நெல்லை பள்ளி மாணவ மாணவியர்க்கு மாநகர காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது...
நெல்லை மாநகர காவல் துறை சார்பாக... 31 வது சாலை பாதுகாப்பு விழா நடைபெற்று வருவதால்.. சாலை பாதுகாப்பு குறித்தும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி நெல்லை மாநகர பள்ளி மாணவ மாணவியர்களுக்கிடையே நடைபெற்றது..

இதில் கலந்து கொண்டு சிறப்பான விழிப்புணர்வு வாசகங்களை எழுதிய மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து
மதிப்புமிகு மாணவன் என்கிற விருது நெல்லை மாநகர காவல் துறையால் இன்று வழங்கப்பட்டது..

விழாவில் நெல்லை மாநகர துணை ஆணையர் மகேஷ்குமார் .,துணை ஆணையர் சரவணன், கூடுதல் துணை ஆணையர் Dr. வெள்ளத்துரை ஆகியோர் மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.. காவல் துணை ஆணையர் சரவணன் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை மாணவ மாணவியர் மத்தியில் உரையாற்றினார்

மாணவ மாணவியரை பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழா ஏற்பாடுகளை நெல்லை மாநகர காவல்துறையினரும்.. நெல்லை காவல் JABO ஆய்வாளர் எழிலரசி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


Comments (0)
Facebook Comments (0)