ட்ரோன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் நெல்லை மாநகர காவல்துறை...
முழு கண்காணிப்பு வளையத்திற்குள் நெல்லை மாநகரம்...
நேற்றிரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது நெல்லை மாநகர காவல்துறை .தேவையில்லாமல் யாரும் வெளியேறாத வண்ணம் நெல்லை மாநகர் முழுவதையும் தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது நெல்லை மாநகர காவல்துறை.

சோதனை சாவடிகளில் முழு சோதனைகளும் நடைபெற்று வரும் நிலையில் ..ட்ரோன் கேமராக்கள் மூலம் நெல்லை மாநகர் முழுவதையும் கண்காணிக்கும் பணியை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் இன்று துவக்கி வைத்தார்.

மேலும் கடும் வெயிலுக்கும் நடுவே கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பணிபுரியும் காவலர்களுக்கு பழச்சாறு கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
விழாவில் உதவி ஆணையர் சதிஷ் குமார் மற்றும் சந்திப்பு காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி கலந்து கொண்டனர்.ட்ரோன் கேமராக்கள் பறந்து கண்காணிக்கும் அதே வேளையில் அதை விட உயர பறக்கும் மனித நேயத்தோடு சூழ்நிலைகளை மிக சரியாக கையாண்டு வருகிறது மாநகர காவல்துறை ,அரசு மருத்துவமனைகள் முக்கிய தனியார் மருத்துவமனைகள் ,முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஆகியவை அடங்கியுள்ள நெல்லை மாநகரில் ஆதரவற்றவர்களுக்கான
உணவு தேவைகள் மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்கு செல்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவலர்கள், தன்னார்வலர்கள். பத்திரிகை நண்பர்கள் மற்றும் மாநகராட்சி மூலமாக செய்து வருகிறது மாநகர காவல்துறை.

முழு ஊரடங்கான இன்று தெருவோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கான உணவு மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் படி தடையின்றி கிடைப்பதையும் காண முடிந்தது


Comments (0)
Facebook Comments (0)