சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS...

சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS...

சோதனை சாவடியில் காவலர்களுக்கு தேநீர்,பழம் ,பிஸ்கட் கப சுர குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கி பாதுகாப்புடன் பணிபுரிய அறிவுறுத்தினார்.

கொரானா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்றுதமிழகமெங்கும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து மாவட்ட எல்லைகளும் காவல்துறையால் கண்காணிப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று காலத்தில் காவலர்களுக்கு பனிச்சுமை அதிகரித்த நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நடந்து  அசத்தியுள்ளார் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS.

 நெல்லையில் உள்ள கங்கைகொண்டான் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் அனைவருக்கும் தேநீர், பிஸ்கட், பழங்கள் மற்றும் கப சுர குடிநீர் பாக்கெட்டுகளை வழங்கி காவலர்கள் அனைவரும் பாதுகாப்புடன் பணிபுரியுமாறு அறிவுறுத்தினார்.

மேலும்  வாகன வருகை பதிவேடுகளை பார்வையிட்ட அவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது காவல் அதிகாரிகள் காவலர்கள்  என  1700  பேர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவிற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள்.மருத்துவம், திருமணம் மற்றும்  அவசர தேவைகளை தவிர தேவையின்றி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் அதிக பணிசுமை காரணமாக காவலர்கள் மனசோர்வடைந்துள்ள நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஒருவரே மனிதநேயத்துடன் காவலர்களுக்கு பழங்கள் பிஸ்கட்டுகள் வழங்கி பாதுகாப்புடன் பணிபுரிய அறிவுறுத்தியது காவலர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்விழாவில்  காவல் துணை கண்காணிப்பாளர்கள் அர்ச்சனா, சுரேஷ்குமார் கங்கை கொண்டான்  காவல் ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.