திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப உத்தரவுபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 114 பேர் மீது சட்ட நடவடிக்கை...

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப உத்தரவுபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 114 பேர் மீது சட்ட நடவடிக்கை...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 114 பேர் மீது சட்ட நடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை.

முன்னீர்பள்ளம் அருகே இருவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள்,  உத்தரவுபடி 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இவ்வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 114 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களில்  58 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.56 பேர் மீது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.