கருணை இல்லத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் இயங்கி வரும் வேலா கருணை இல்லத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் வேலா கருணை இல்லத்தில் ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களின் நலன்களை நேரில் சென்று விசாரித்தார். பின்னர் வேலா கருணை இல்லத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு மற்றும் காரங்கள் வழங்கினார்.

மேலும் மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கி கொரானா காலத்தில் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தினார் .மேலும் அவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்ளுமாறு காப்பக உரிமையாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் கயர்லாபாத் காவல் ஆய்வாளர் S.ராஜா உடன் இருந்தார்.


Comments (0)
Facebook Comments (0)