கொரோனாவால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு உருவ படத்திற்கு அஞ்சலி ...

கொரோனாவால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு உருவ படத்திற்கு அஞ்சலி ...

கோவை மாநகரம் B4 உக்கடம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெயக்குமார் ( வயது 53 ) என்பவர் கொரோனா நோய் தொற்று காரணமாக இறந்து விட்டார் .இன்று காலை 11.00 மணியளவில் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர்,IPS., கோவை மாநகர காவல் அலுவலக வளாகத்தில் இறந்து போன சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

கோவை மாநகர காவல் ஆணையரைத் தொடர்ந்து காவல் துணை ஆணையர்கள் ,கூடுதல் காவல் துணை ஆணையர் நுண்ணறிவு பிரிவு மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினார்கள் .

போதிவர்தன்,

உதவி ஆசிரியர்.