அரியலூரில் காவல்துறையினர் பிரம்மாண்டகொடி அணிவகுப்பு பேரணி...

அரியலூரில் காவல்துறையினர் பிரம்மாண்டகொடி அணிவகுப்பு பேரணி...

அரியலூர் நகரில் 23.12.2020 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
V.R.ஸ்ரீனிவாசன்
 தலைமையில் காவல்துறையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இம்மாவட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயலுக்கும், ரவுடிசத்திற்கும், கஞ்சா போன்ற  போதைப் பொருள் விற்பனைக்கு இம்மாவட்டத்தில் இடம் கிடையாது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இவ்வணிவகுப்பில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தர மூர்த்தி, அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மதன், அரியலூர் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன், அரியலூர் காவல் ஆய்வாளர் செந்தில்மாறன், கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், கயர்லாபத் காவல் ஆய்வாளர் ராஜா,அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் மற்றும் 200க்கு மேற்பட்ட காவல்துறையினர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இப்பேரணியானது அரியலூர் காமராஜர் திடலில் தொடங்கி சத்திரம், எம்ஜிஆர் சிலை வழியாக அண்ணா சிலையில் நிறைவடைந்தது.