டிஐஜி டாக்டர் கண்ணன் IPS அவர்களுக்கு வீர தீர செயலுக்கான முதல்வரின் விருது...
தமிழகத்தில் மிகப்பெரிய சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்டு பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அல் உம்மா தீவிரவாதி காஜாமொய்தீன் மற்றும்கூட்டாளிகள், கலியக்காவிளை சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தப்மி ஓடிய அப்துல்சமீம், தவுபிக் ஆகிய 2 தீவிரவாதிகளை கைது செய்தது உள்ளிட்ட வீர தீர செயலுக்கான 'முதல்வரின் விருது' மாநில உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு) டிஐஜி டாக்டர் கண்ணன், கியூ பிரிவு எஸ்பி மகேஷ், சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி. அரவிந்த் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது..


இவர்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான ரொக்கப்பரிசும் வழங்கப்படும். விருது பெறும் டிஐஜி கண்ணன் மத்திய உளவுத்துறையில் 7 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி கடந்த ஆண்டுதான் மாநில உளவுத்துறை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டார். 2002-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வுபெற்று தமிழக அரசின் காவல்துறை பணியில் சேர்ந்தார். இவர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறந்தவர். கோவில்பட்டி உதவி எஸ்.பி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments (0)
Facebook Comments (0)