குற்றவாளிகளை பிடித்த காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,
கோவை மாவட்டத்தில் இரு வேறு வழக்குகளில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்த கோவில்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமார் டீம் மற்றும் மதுக்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் மதிவாணன் டீமை நேரில் அழைத்து பாராட்டிய கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் தனசேகரன் என்பவர் தனியார் கம்பெனியில் கடந்த 7 வருடமாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அதே கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக பணிபுரியும் அழகுபாண்டியன் மற்றும் இரும்பு கடை நடத்தி வரும் நவமணி ஆகிய இருவரும் ரூபாய் 20000/- மதிப்புள்ள காப்பர் வயரை திருடிச் சென்றுள்ளனர். இது சம்மந்தமாக தனசேகர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு மேற்படி நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்.

கோவை மாவட்டம் மதுக்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் மதிவாணன் நாச்சிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக மணல் கடத்திய உதயகுமாரை கைது செய்து அவரிடமிருந்த 2 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து மதுக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மதுக்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் மேற்படி உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
போதிவர்தன் , உதவி ஆசிரியர்...


Comments (0)
Facebook Comments (0)