கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய ரகசிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் ஆயிரம் அன்பளிப்பு ...
தமிழ்நாட்டில் காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் கஞ்சா விற்பனையையும், கஞ்சா பயன்படுத்தும் இளைஞர்களை, மாணவர்களை காக்கும் விதமாக கஞ்சாவை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்யும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் முயற்சியில் திண்டுக்கல் சரக துணைத்தலைவர் முத்துச்சாமி IPS.,வழிகாட்டுதலின் பெயரில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள கஞ்சா விற்பனையாளார்களை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பழனி தாலுகா காவல் நிலையம், பழனி உட்கோட்டப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய ரகசிய தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூபாய் 1000/- அன்பளிப்பு வழங்கப்படும் என்ற அறிப்பு தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காவல்துறைக்கு தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும் என்று காவல்துறை சார்பில் முழு உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதையில்லாத சமூகத்தை உருவாக்கும் முயற்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காவல்துறையின் முயற்சி வெற்றி பெற காவலர் வாய்ஸ் சார்பில் வாழ்த்துக்கள்.


Comments (0)
Facebook Comments (0)