அதிகாரிகளை எச்சரித்த கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி IAS...
தமிழ் நாட்டின் இரண்டாவது நீளமான கடற்கரையாக கருதப்படும் சில்வர் பீச் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. கடலூரில் இந்த கடற்கரை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். குதிரையேற்றம் மற்றும் படகு சவாரி உட்பட பல பொழுதுபோக்குகளை தரும் இடமாக இந்த கடற்கரை விளங்குகிறது. சிறார்களின மனதை கவரும் வகையில் ஒரு படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கடற்கரைக்கு செல்லும் சாலையின் ஓரங்களில் தேவையற்ற கட்டிட கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த வழியே இன்று செல்லும் போது சந்திரசேகர் சாகமூரி,இஆப., பார்வையிட்டார்.

மேலும், இப்பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். மேலும், நகராட்சி அலுவலர்களுக்கு சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றிட உத்தரவிட்டார். அப்பகுதியினை அவ்வப்போது கண்காணித்து பராமரிக்க அரசு அலுவலர்களை எச்சரித்து அங்கு இருந்து கிளம்பினார்.


Comments (0)
Facebook Comments (0)