முதியவரை காப்பாற்றிய உதவி ஆய்வாளருக்கு குவிகிறது பாராட்டு...
சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம் ...
உயிரை பணயம் வைத்து முதியவரை காப்பாற்றிய உதவி ஆய்வாளருக்கு குவிகிறது பாராட்டு...

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் ரயிலில் அடிபட்டு இறந்ததாக தகவல் வந்த நிலையில்.. இறந்த முதியவரின் உடலை கைப்பற்ற சென்ற ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேஷ்வரராஜ் மற்றும் தனி பிரிவு தலைமை காவலர் பிலிப் ஆகியோர்... தண்டவாளத்தில் அடிபட்டு இறந்ததாக கூறப்பட்டவருக்கு அருகில்
செல்லும் போது, சென்னை நோக்கி செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலின் வெளிச்சத்தில் கால் துண்டான நிலையில் முதியவரின் உடலில் அசைவு இருந்ததை கண்ட உதவி ஆய்வாளர் சமயோசிதமாக செயல்பட்டு தன் உயிரை பணையம் வைத்து தலைமை காவலர் பிலிப் உடன் இணைந்து முதியவரை அப்புறப்படுத்தி விட்டு அருகில் உள்ள பள்ளத்தில் குதித்து தானும் உயிர் தப்பி உள்ளார்,
விரைவு ரெயில் மிக அருகில் வந்த போதும் தங்கள் உயிரை துச்சமென மதித்து மிக விரைவாக செயல்பட்டு முதியவரை காப்பாற்றிய காவலர்களுக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. பொதுமக்கள், இளைஞர்கள் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்
இன்று குமரி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக , பொருப்பாளர் சிவா தலைமையில் நிர்வாகிகள் , இளைஞர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
இணையதளங்களிலும் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் பிலிப்..பிற்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.


Comments (0)
Facebook Comments (0)